தனியார் டேங்க் லாரி தண்ணீர் ரூ. 2,000-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்வு! சென்னை மக்கள் அவதி!!

ரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தனியார் டேங்க் லாரி தண்ணீர் ரூ. 2,000-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்வு! சென்னை மக்கள் அவதி!!

கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


Chennai: 

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் தனியர் டேங்க் லாரி தண்ணீரை ரூ. 4 ஆயிரம் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஏப்ரலில் ரூ. 2 ஆயிரமாக இருந்த டேங்கர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் வற்றி விட்ட நிலையில் சில பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சென்னையின் தென் பகுயில் இருக்கும் ராம் நகரை சேர்ந்தவர் ஷாஜி மேத்யூஸ் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளராக உள்ளார். 

அவரது வீட்டில் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள டேங்க அமைக்கப்பட்டுள்ளது. தனியார் டேங்கர் லாரியிடம் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகிறார். அவரது வீட்டில் 2 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தனியார் டேங்க்  லாரி தண்ணீரை அவர்கள் 3 வாரத்திற்கு பயன்படத்துகின்றனர். 

தண்ணீர் உபயோகம் குறித்து அவர் கூறுகையில், 'ஏப்ரலில் ஒரு லோட் தண்ணீர் ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கினோம். இன்றைக்கு ரூ. 4500 - ஆக உயர்ந்துள்ளது. நான் ஓய்வு பெற்ற ஊழியர். எனது ஓய்வூதியத்தின் அதிகப்படியான தொகை தண்ணீருக்கே செலவாகிவிடும் போல் உள்ளது' என்றார். 

ராஜா என்பவர் கூறுகையில் ஒரு மாதத்திற்கு மட்டும் தனியார் டேங்கர் லாரி தண்ணீருக்கு ரூ. 2,500-யை செலவு செய்கிறேன். எனது அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரையும் சேர்த்தால் ரூ. 75 ஆயிரம் வரை தண்ணீருக்கு செலவாகிறது என்றார். 

தனியார் டேங்க் லாரி தரப்பில் அதன் உரிமையாளர் சங்க மாநில தலைவர் நிஜலிங்கம் கூறுகையில், 'முன்பெல்லாம் ஒரு 30 கிலோ மீட்டர் வரைக்கும் சென்று நாங்கள் தண்ணீர் எடுத்து வருவோம். தற்போது 100 கிலோ மீட்டர் வரைக்கும் செல்ல வேண்டி உள்ளது. டோல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.' என்றார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................