This Article is From Aug 28, 2020

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 28 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,14,448 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 28 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

தற்போது 13,450 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தினை கடந்துள்ளது. நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 76,345 மாதிரிகளில் 5,981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 29வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 5,870 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (28.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 242
மணலி - 156
மாதவரம் - 572
தண்டையார்பேட்டை - 993
ராயபுரம் - 881
திரு.வி.க நகர் - 1,041
அம்பத்தூர் - 1,185
அண்ணா நகர் - 1,512
தேனாம்பேட்டை - 894
கோடம்பாக்கம் - 1,566
வளசரவாக்கம் - 1,003
ஆலந்தூர் - 706
 அடையாறு - 1,287
பெருங்குடி - 543
சோழிங்கநல்லூர் - 573
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 296

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,14,448 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 88 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,666 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,450 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

.