This Article is From Nov 05, 2018

சென்ட்ரல் பூங்காவை தனது அழகால் கவர்ந்த மன்டரேன் வாத்து.

கிழக்கு ஆசிய பகுதியை சேர்ந்த இந்த வாத்து வகை கடந்த அக்டோபர் மாதம் சென்ட்ரல் பூங்காவில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

சென்ட்ரல் பூங்காவை தனது அழகால் கவர்ந்த மன்டரேன் வாத்து.

நியூ யார்க் நகரில் அமைந்துள்ள பிரபலமான சென்ட்ரல் பூங்காவுக்கு சற்றும் எதிர்பார்க்காத அரிய விருந்தினர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பளிச்சென்ற வர்ணங்கள் கொண்ட மன்டரேன் வகை வாத்துதான் அந்த புதிய விருந்தினர். கிழக்கு ஆசிய பகுதியை சேர்ந்த இந்த வாத்து வகை கடந்த அக்டோபர் மாதம் சென்ட்ரல் பூங்காவில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் திரும்பிய திசை எல்லாம் இந்த வாத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளது.

அங்குள்ள வனவியல் பூங்காக்களில் வாத்துகள் தொலைந்து போகாத நிலையில்,சீனா மற்றும் ஜப்பானில் காணப்படும் இந்த வகை மன்டரேன் வாத்துக்கள்அமெரிக்காவுக்கு வந்தது எப்படி என அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

‘வாத்துகளை அங்கு செல்லப் பிராணிகளாக வளர்க தடை என்பதால் அதை அங்கு விட்டுச்செல்வதற்க்கு வாய்ப்புள்ளது' என டைம்ஸ் பத்திரிகையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த ஆண் வாத்து அங்குள்ள குளத்தில் இயல்பாகவே வசித்து வருவதால் தற்போதைய நிலையில் அதை இடமாற்றவோ அல்லது பிடித்து அடைக்க மாட்டோம் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


மேலும் இந்த மன்டரேன் வாத்து தற்போது அதன் வசீகர தோற்றத்தால் மக்களை அங்கு ஈர்த்து வருகிறது.

Click for more trending news


.