This Article is From Nov 07, 2019

கோவை சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற கீழ் நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது, அந்த தீர்ப்பில் எந்த திருத்தத்தையும் செய்ய நாங்கள் விரும்பவில்லை

கோவை சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

ஏற்கனவே வழங்கப்பட்ட மரண தன்டைனையை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பு

New Delhi:

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதோடு, அவரது தம்பியும் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர். இதில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியபோது, மோகன்ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு கோவை நீதிமன்றம், தூக்குத்தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி; அதாவது தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட வேண்டும் என கூறி மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், சுபாஷ் ரெட்டி மற்றும் சூர்யகாந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, விசாரணை நிறைவடைந்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுது.

அதில், ஏற்கனவே உச்சநீதிமன்ற கீழ் நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது, அந்த தீர்ப்பில் எந்த திருத்தத்தையும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. என்று கூறிய நீதிபதிகள் அவருடைய மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் மனோகரனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க கூடிய மரண தன்டைனையை தற்போது மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

.