பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி!!

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் ராகுல் காந்தி மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி!!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கிறது.

New Delhi:

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருக்கும் ராகுல் காந்தி மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

குடியரசு தலைவர் மாளிகையில் மோடியின் பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. முன்பிருந்த அமைச்சர்களே மீண்டும் பதவியில் நீடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவை இந்த தேர்தலில் தமிழ்நாடு முற்றிலும் புறந்தள்ளியுள்ள நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

More News