காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

பாஜகவைச் சேர்ந்த சுஸ்மா சுவராஜ் மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் நிஷாமுதீன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

அவர் நேற்று மதியம் 3:30 மணி அளவில் இயற்கை எய்தினார்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ஷீலா தீட்சித் மாரடைப்பால் நேற்று மதியம் மருத்துவமனையில் காலமானார்
  2. 3 முறை தொடர்ச்சியாக டெல்லியில் ஆட்சி புரிந்தார்
  3. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் ( Sheila Dikshit Dies ), 81 வயதில் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரான தீட்சித், உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். 
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மதியம் 3:30 மணி அளவில் இயற்கை எய்தினார். ஷீலா தீட்சித்தின் இறப்பு குறித்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 

டெல்லி காங்கிரஸின் தலைவராக இருந்த தீட்சித், 1998 முதல் 2003 வரை, தொடர்ந்து 3 முறை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார். 

2014 ஆம் ஆண்டு அவர் கேரள மாநில ஆளுநராக ஆக்கப்பட்டார். ஆனால் 6 மாதத்தில் அந்தப் பதவியைத் துறந்தார் தீட்சித்.

ஷீலா தீட்சித் இறுதி ஊர்வலம் இன்று 2.30 மணியளவில் தொடங்குகிறது. யமுனை ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்வுள்ளது.

9j4nu7qo

பாஜகவைச் சேர்ந்த சுஸ்மா சுவராஜ் மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் நிஷாமுதீன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி அரசு இரண்டு நாள்  துக்க நாளாக அறிவித்துள்ளது.

ஷீலா தீட்சித் மறைவை அடுத்து காங்கிரஸ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஷீலா தீட்சித் இறப்பு குறித்து வரும் செய்தியால் நாங்கள் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் ஸ்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி, “மிகவும் கரிசனமான மனம் கொண்டவர் ஷீலா தீட்சித். டெல்லியின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தகும் அளவுக்கு அவர் உழைத்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................