This Article is From Jul 07, 2018

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான சசி தரூருக்கு, மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது

ஹைலைட்ஸ்

  • இந்த வழக்கில் சென்ற மாதம் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
  • அதில், தரூர் மற்றுமே குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது
  • சில நாட்களுக்கு முன்னர் தான் தரூருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான சசி தரூருக்கு, மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த வழக்கில் தரூருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவரின் முன் ஜாமீனை, ஜாமீனாக மாற்றம் செய்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

ஜாமீனுக்குத் தேவையான 1 லட்ச ரூபாயை தரூர் செலுத்தினார். இதையடுத்து, வெளிநாட்டுக்கு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 

சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானிய பத்திரிகையாளருடன் தொடர்பு வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் அவரது கணவர் சசி தரூர் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சுனந்தாவின் மரணத்திற்கு முந்தைய நாளில் இருந்து அவரது போன் அழைப்புகளை, சசி தரூர் முழுமையாக தவிர்த்த்துள்ளார்’, என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றானர்.

சுனந்தா புஷ்கர் அவரை தொடர்பு கொள்ள சமூக ஊடகங்கள் மூலம் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதையும் சசி தரூர் புறக்கணித்துவிட்டார், என குற்றப்பத்திரிக்கை கூறுகிறது.

தரூருக்கு, சுனந்தா அனுப்பிய மின்னஞ்சலில், ‘நான் வாழ விரும்பவில்லை , நான் இறக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்’ என்று எழுதியிருந்ததாக, விசாரணை அதிகாரிகள் கூறினர்.

அவரது கடைசி இ-மெயில் மற்றும் சமூக ஊடக பதிவுகளை அவரது மரண அறிவிப்பாக எடுத்துக் கொண்டதாக போலீஸார் கூறினர்.

3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒருவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யாமல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்யும் போது முன் ஜாமீன் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்று சசி தரூர் தரப்பில் வாதிடப்பட்டது.

‘இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது, அடிப்படை ஆதாரமில்லாதது. பழிவாங்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சசி தரூர். 

இந்த வழக்கு ஜூலை 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

.