This Article is From Apr 15, 2019

பிரார்த்தனையின் போது கீழே விழுந்த சசிதரூர்! - தலையில் பலத்த காயம்!

Shashi Tharoor News: காயம் ஏற்பட்டதும் உடனடியாக சசிதரூர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

பிரார்த்தனையின் போது கீழே விழுந்த சசிதரூர்! - தலையில் பலத்த காயம்!

கேரளாவில் உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.
  • திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
  • அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
New Delhi:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் (Shashi Tharoor) கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு தலையில் 6 தையல் வரை போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலத்தில் புத்தாண்டு பண்டிகையான விஷூ தினத்தையொட்டி, அம்மாநில மக்கள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்தவகையில், எடைக்கு எடை பழங்கள் மற்றும் பலகாரங்கள், வழங்கும் பிரார்த்தனையான ‘துலாபாரத்தில்' சசிதரூர் பங்கேற்றார்.

இந்த பிரார்த்தனையின் போது, சசிதரூர் கீழே விழுந்து காயமடைந்தார். காயம் ஏற்பட்டதும் உடனடியாக சசிதரூர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், 6 தையல் வரை போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், காங்கிரஸ் தலைவர் சசிதரூர் (Shashi Tharoor) மஞ்சள் நிற குர்தா அணிந்து எடை மேடையில் அமர்ந்து காணப்படுகிறார்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், கேரளாவுக்கு ஏப்.23 தேதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் வரும் மே.23 தேதி வெளியாகிறது.

.