This Article is From Jan 09, 2020

மகாராஷ்டிரா : மாவட்ட அளவிலான தேர்தலில் பாஜக படுதோல்வி! நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி!!

பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அமைந்திருக்கும் நாக்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

மகாராஷ்டிரா : மாவட்ட அளவிலான தேர்தலில் பாஜக படுதோல்வி! நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி!!

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தே தேர்தலை எதிர்கொண்டன.

Mumbai:

மகாராஷ்டிராவில் மாவட்ட அளவிலான தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட நிலையில், செல்வாக்கை மீட்க பாஜக தவறி விட்டது. 

சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது பாஜகவுக்கு கிடைத்திருக்கும் தோல்வி அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

குறிப்பாக பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூரிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இங்கு காங்கிரஸ் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 15 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 11 மற்றும் சிவசேனாவுக்கு ஒரு இடமும் கிடைத்தன. 

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வாஷிமில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இங்கு என்.சி.பி. 12 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

பல்காரில் சிவசேனா 18 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆறுதல் அளிக்கும் வகையில் துலேவில் பாஜக 39 இடங்களை கைப்பற்றியது. நந்துர்பாரில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இழுபறி நீடிக்கிறது. இரு கட்சிகளும் 23 இடங்களில் உள்ளன. 

மகாராஷ்டிராவில் மாவட்ட அளவிலான தேர்தலில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சிவசேனாவால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதனால் மாவட்ட அளவிலான தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் கட்சி தலைவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை அளித்துள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த கிராமமான நாக்பூரில் உள்ள தபேவாடாவிலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. 

இங்கு காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர டோங்க்ரே, பாஜக வேட்பாளர் மாருதி சோம்குவாரை சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். 

.