This Article is From Aug 27, 2020

காங்கிரஸ் தலைமை குறித்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் குலாம் நபி ஆசாத்!

மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் செயற்குழுவைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் பரிந்துரைத்துள்ளார்.

காங்கிரஸின் வளர்ச்சியை விரும்புபவர்கள் அதிருப்தி கடிதத்தினை வரவேற்ப்பார்கள்

ஹைலைட்ஸ்

  • மூத்த நிர்வாகிகள் 24 பேர் கட்சியின் தலைவருக்கு தெரிவித்திருந்தனர்.
  • சோனியாக காந்தியை மீண்டும் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதை உறுதி செய்தது.
  • தற்போது தலைவராக பொறுப்பேற்கும் நபருக்கு ஒரு சதவிகித வாக்குக் கூட இல்லை
New Delhi:

காங்கிரஸ் கட்சியில் சமீப காலமாக ஏற்பட்டு வந்த சலசலப்பு சில நாட்களுக்கு முன்னர் உச்சத்தை தொட்டது. கட்சியின் தலைமையை மாற்றக்கோரியும், முழு நேர பணியில் உள்ள ஒரு தலைமைக்கான அவசியத்தையும் கடிதம் மூலமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் 24 பேர் கட்சியின் தலைவருக்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், "அதிருப்தி" கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மாற்று தலைமையின் தேர்தலுக்கான கோரிக்கையை முன்மொழிந்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் ஒரு சதவிகித ஆதரவு கூட இல்லையென பகிரங்கமாக கூறியுள்ளார். இக்கருத்து தற்போது பெரும் அதிர்வலைகளை கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கட்சியின் செயற்குழு இந்த அதிருப்தி கடிதத்தினை கடுமையாக விமர்சித்து சோனியாக காந்தியை மீண்டும் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதை உறுதி செய்தது.

இதனை, “தற்போது தலைவராக பொறுப்பேற்கும் நபருக்கு ஒரு சதவிகித வாக்குக் கூட இருக்காது. செயற்குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் நபரை நீக்க முடியாது. ஆகவே தேர்தலை நடத்த வேண்டும்.” என ஆசாத் கோரியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் செயற்குழுவைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த அதிருப்தி கடிதமானது ராகுல்காந்திக்கு எதிரானதாக பாலரார் பார்க்கப்படுகின்றது. ஆனால், தனது தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் அவர் களத்தல் இயங்கிக்கொண்டிருக்கிறார். முன்னதாக கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்திருந்தார்.

இந்த அதிருப்தி கடத்தையொட்டி கூட்டப்பட்ட கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் துரோகிகள் என்று விமர்சிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மல்லிகார்ஜுன் கார்கே, அம்பிகா சோனி போன்ற தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில், “ஆசாத் போன்ற "தீய எண்ணம் கொண்டவர்கள்" பேச அனுமதிக்கக் கூடாது” என்றும் சோனியா காந்தியால் கண்டிக்கப்பட்டார் என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

அடுத்த ஆறு மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) அமர்வு வரும் வரை சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருப்பார் என்று காங்கிரஸ் அறிவித்ததோடு கூட்டம் முடிந்தது. கடிதம் எழுதுபவர்களின் குறைகளை கட்சி ஆராயும் என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

.