சிங்கம் ஒன்று புறப்பட்டதே... திக் திக் வீடியோ பதிவு! #ViralVideo

இதுவரை சுமார் 2 மில்லியன் பேர் பார்வையிட்ட வீடியோ காட்சி.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே... திக் திக் வீடியோ பதிவு! #ViralVideo

தென் ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்காவுக்கு அருகேயுள்ள சாலையில் நான்கு சிங்கங்கள் நடந்த காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வெளியான இந்த வைரல் வீடியோவை, இதுவரை சுமார் 2 மில்லியின் நபர்கள் பார்த்து பகிர்ந்துள்ளனர்.

 
 

மேலும் இந்த வீடியோ காட்சியில் அந்த சிங்கங்கள் சாலை நெருக்கடிக்கு இடையில் மிகவும் கம்பிரமாக நடந்து வருவதை நம்மால் காண முடிகிறது. 1 நிமிடத்திற்கும் குறைவான இந்த வீடியோ பதிவில் சிங்கங்கள் சாலைக்கு நடுவே நடப்பதை பார்த கார் ஓட்டுநர்கள் மிகவும் பயந்து நடுங்குவது தெரிகிறது. இதுவரை சுமார் 34,000 பேர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் பலர் தங்களது கருத்துகளை, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

Click for more trending news