'வீட்டில் சிலுவை வைத்திருப்பது ஏன்?' - சீண்டிய கேள்விக்கு நடிகர் மாதவன் நெத்தியடி பதில்!!

சுதந்திர தினத்தன்று நடிகர் மாதவன் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு கமென்ட் செய்த ஒருவர் மாதவனை சீண்டும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'வீட்டில் சிலுவை வைத்திருப்பது ஏன்?' - சீண்டிய கேள்விக்கு நடிகர் மாதவன் நெத்தியடி பதில்!!

நடிகர் மாதவனின் பதிலை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.


வீட்டில் சிலுவை ஏன் என சீண்டும் வகையில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நடிகர் மாதவன் அளித்துள்ள பதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சுதந்திர தினமான நேற்று நடிகர் மாதவன் இன்ஸ்டாகிராமில் தனது குடும்ப புகைப்படைத்தை வெளியிட்டிருந்தார். அதில் சட்டை இல்லாமல் பூணூல் மற்றும் வெள்ளை வேஷ்டி இருக்கும் வகையில் மாதவனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். 
 

இந்த புகைப்படத்தை பதிவிட்டு கீழே, ''அனைவருக்கும் சுதந்திர தின, ரக்ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள். உலகத்தில் அமைதியும், வளமும் நீடித்திருப்பதற்கு இறைவனிடம் கேட்கப்படும் பிரார்த்தனைகள் தொடரட்டும்'' என்று மாதவன் தனது வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 

அவர் பதிவிட்ட புகைப்படத்தில், பின்னால் ஒரு சிலுவை இருந்தது. இதனைப் பார்த்து ஒரு சமூக வலை தள பயன்பாட்டாளர், 'மாதவன் வீட்டில் சிலுவை ஏன் இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதற்கு மாதவன் அட்டகாசமான பதிலை அளித்துள்ளார். 
 

அவர் தனது பதிலில், 'உங்களைப் போன்றவர்கள் தரும் மரியாதையை நான் ஒருபோதும் விரும்பியது இல்லை. நீங்கள் குணம் அடைவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வியாதி, என் வீட்டில் சீக்கிய கோயில் படம் இருப்பதை உங்களுக்கு காண்பிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. அதைப் பார்த்தால் நான் சீக்கியன் ஆகிவிட்டேன் என்று சொல்வீர்கள். 

நான் முஸ்லிம் தர்காவில் இருந்தும் மற்ற அனைத்து மத கோயில்களில் இருந்தும் ஆசிர்வாதம் பெறுகிறேன். பிற மத பொருட்கள் எனக்கு அன்பளிப்பாக வரும். எனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதே நேரம் அனைத்து மத நம்பிக்கைளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்றும் நான் சிறு வயது முதலே சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன்.' என்று கூறியுள்ளார். 

மாதவனின் பதிலுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................