அந்தப் படத்தைப் பகிர்ந்த ட்விட்டர் வாசிகள், படுவைரலான மீமாக அதை மாற்றியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வனத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஒரு சிறுத்தை குறித்தான புகைப்படம், வைரல் மீம் மெட்டிரியலாக மாறியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஐஐடி கல்வி நிறுவன வளாகத்துக்கு அருகே மீட்கப்பட்ட சிறுத்தை பல முறை சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் அதை வனத் துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்தான புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதில் ஒரு படம் நெட்டிசன்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிறுத்தையை படம் எடுக்கும்போது, அது ஒரு கட்டத்தில் கேமராவுக்கு அருகே வந்து கர்ஜித்துள்ளது. பற்கள் கூறாக தெரியும் வண்ணம், மிக ஆக்ரோஷமான அந்த கர்ஜ்ஜனை, கேமரா ஆங்கிலில் சிரிப்பது போல இருந்துள்ளது. அதுவே மீம் கன்டென்டாக மாறியுள்ளது.
அந்தப் படத்தைப் பகிர்ந்த ட்விட்டர் வாசிகள், படுவைரலான மீமாக அதை மாற்றியுள்ளனர். சில ட்வீட்களைப் பாருங்கள்:
ஒரு ட்விட்டர் பயனர் சிறுத்தையின் படத்தைப் பகிர்ந்து, ‘என் வாழ்க்கையில் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்,' என்று வேடிக்கையாக பகிர்ந்துள்ளார்.
சிறுத்தை குறித்து உள்ளூர் வனத் துறை அதிகாரி, டிஎஸ் சுலியா, “இந்த பெண் சிறுத்தையின் வயது 3 அல்லது 4 இருக்கும். ஐஐடி வளாகத்துக்கு அருகே அடிக்கடி அது தென்பட்டுள்ளது. அதனால் அதை நாங்கள் பிடித்தோம். சீக்கிரமே இந்த சிறுத்தை வனப் பகுதியில் விடப்படும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
Click for more
trending news