This Article is From Oct 06, 2018

கன்னியாஸ்திரி விவகாரம்: பாதிரியாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில், கேரள நீதிமன்றம் பாதிரியார் பிராங்கோ முல்லக்காலின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்தது.

கன்னியாஸ்திரி விவகாரம்: பாதிரியாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

கன்னியாஸ்திரியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்கால்.

Kottayam:

கன்னியாஸ்திரியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்காலின், நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதுசெய்யப்பட்ட பாதிரியாரின் நீதிமன்ற காவல் இன்றோடு முடியும் நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அவர் ஆஜர்படுதப்பட்டார். அப்போது நீதிபதிகள், பாதிரியாரை அக்டோபர்.20 வரை நீதிமன்ற காவலில் வைக்க கோரி உத்தரவிட்டனர்.

இதனிடையே பாதிரியார் தரப்பு வழக்கறிஞர்கள், கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மீண்டும் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த புதனன்று விசாரணைக் காவலில் உள்ள பாதிரியாருக்கு ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.