2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
Greater Noida: 

பாஜக அரசுக்கு எந்த சவாலும் இல்லை என்றும், 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுவதற்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அடிக்கல் நாட்டினார். 
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக அரசுக்கு எந்த சவாலும் இல்லை. பாஜகவின் வெற்றியைப் பார்த்து பயந்துபோனதால், எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். 

பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. மோடி தலைமையில் நாங்கள் வலுவான பிரபலமான தலைமையை பெற்றிருக்கிறோம். சாமானிய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

4.5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................