ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ’தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக்!

இந்த படத்திற்கான படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்க உள்ளதாக தெரிகிறது

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ’தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக்!

படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்திற்கு 'தர்பார்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக்கையும் பட தயாரிப்புக்குழு தற்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது, எனினும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளது படக்குழு. 

அதன்படி, ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இந்த புதிய படத்திற்கு ‘தர்பார்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதும் போஸ்டர் மூலம் தெரிய வருகிறது. 

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இதனால், இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது போன்ற தகவல்கள் இணையத்தில் பரவியது. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

பர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும் போது இது கண்டிப்பாக போலீஸ் ஸ்டோரியாக தான் இருக்கும் என ரஜினி ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர். 'ரஜினியின் தர்பார் ஆரம்பம்' என கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இணையத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.