This Article is From Jul 22, 2020

‘கந்தனுக்கு அரோகரா..!’- ‘கறுப்பர் கூட்டம்’ விவகாரத்தில் ரஜினி கருத்து

"இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்."

‘கந்தனுக்கு அரோகரா..!’- ‘கறுப்பர் கூட்டம்’ விவகாரத்தில் ரஜினி கருத்து

"எல்லா மதமும் சம்மதமே!!!! கந்தனுக்கு அரோகரா!!!"

ஹைலைட்ஸ்

  • 'கறுப்பர் கூட்டம்' நிர்வாகிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது
  • தற்போது 'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது
  • ரஜினி, ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்

சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக ‘கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனல் மீது பாஜக, “இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக” சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து ‘கறுப்பர் கூட்டம்' நிர்வாகிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது. தொடர்ந்து அந்த யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது. 

கந்தசஷ்டி கவசத்தை அவமதித்ததன் மூலம் முருகனை ‘கறுப்பர் கூட்டம்' இழிவுபடுத்திவிட்டதாக பல தரப்பினர் கொந்தளித்தனர். 

இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!!! கந்தனுக்கு அரோகரா!!!” என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார். 

.