This Article is From Aug 10, 2020

ராஜஸ்தான் அரசியல்; பெரும் குழப்பத்திற்கு மத்தியில் ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்!

முன்னதாக தன்னை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக சச்சின் பைலட் முதல்வர் அசோக்குடன் கருத்து மோதலை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் கெஹ்லோட் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் ஒற்றுமையை நம்பிக்கை வாக்கெடுப்பில் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

New Delhi:

கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் தொடங்கியது. ஆளும் காங்கிரஸ் அரசின் துணை முதல்வரான சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர் கொடியை உயர்த்தியிருந்தார்.

சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் அசோக் கெலாட்டின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக பல்வேறு கருத்துக்கள் மேலெழுந்தன. ஆனால், இதனை மறுத்து சச்சின் பைலட் தற்போது காங்கிரஸ் உயர் மட்ட அளவில் பேச்சு வாரத்தை நடத்தி வருகிறார். காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தற்போது சந்தித்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சோனியாக காந்தி பங்கெடுத்தாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. இதன் பின்னர் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே இருந்த அதிருப்தி மறைந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சச்சின் பைலட் தரப்பின் முக்கிய பிரச்னை அப்படியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அசோக் கெஹ்லோட், முதலமைச்சராக நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த மாதம், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க முயன்றதாகவும். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் சட்டசபையின் ஒரு சிறப்பு அமர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே சமரசத்திற்கு ஒரு புதிய முயற்சி பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன, ஒருபுறம் அசோக் கெஹ்லோட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பகமான வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பைலட் தரப்பு அதிருப்தி எம்எல்ஏக்களின் பலத்தை மட்டுமே அசோக் நம்பிக்கொண்டிருக்கவில்லை.

முன்னதாக தன்னை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக சச்சின் பைலட் முதல்வர் அசோக்குடன் கருத்து மோதலை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.