This Article is From Jan 28, 2019

காங்., ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம்: ராகுல் வாக்குறுதி!

இனி நாட்டில் பசியும், எழ்மையும் இருக்காது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீகர் பொதுக்கூட்டத்தில் முக்கிய வாக்குறுதியை ராகுல் அளித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • 2019 தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்
  • இதன் மூலம் இனி நாட்டில் பசியும், எழ்மையும் இருக்காது.
  • பாஜக இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சிக்கிறது.
New Delhi:

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் இன்று நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளது. 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும்.

இந்தியாவில் பசியுடன் உறங்குபவர்கள் யாரும் இல்லை என்ற நிலை வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பாஜக இரண்டு இந்தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.


 

.