This Article is From Jul 03, 2019

ராகுலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் யார்? - 2 பேரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு!!

தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி விடாப்பிடியாக உள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக மல்லிகார்ஜுன கார்கே தோல்வியை சந்தித்துள்ளார்.

New Delhi:

பதவியை ராஜினாமா செய்வதில் மாற்றம் இல்லை என்று ராகுல் காந்தி விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், இன்று மாற்று தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி ராகுல் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 2 பேரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் பரவுகின்றனர். 

சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜுன கார்கேவுக்குத்தான் அடுத்த காங்கிரஸ் தலைவராக ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம் நரசிம்ம ராவ், சீதாராம் கேசரிக்கு பின்னர் நேரு-காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழி நடத்திச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. தலைவரை இறுதி செய்வதில் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

77 வயதாகும் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். கார்கேவை விட ஷிண்டேவுக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் தலித் முகமாகவும் சுஷில் குமார் பார்க்கப்படுகிறார். 

76 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக கார்கே பலமுறை பொறுப்பு வகித்திருக்கிறார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

தற்போதும் தனது முடிவில் தீர்மானமாக இருப்பதாகவும், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடபோவதில்லை என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கட்சியின் அடுத்த தலைவர்களாக மல்லிகார்ஜுன கார்கே அல்லது சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.