புதிய காங்., தலைவரை கட்சியே முடிவு செய்யும்; நான் அதில் தலையிடவில்லை: ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் முடிவினை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்த போதிலும், ராகுல் தனது முடிவில் இன்னும் உறுதியாகவே உள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

பொறுப்பானவர் தற்போது கட்சியை வழிநடத்த தேவைப்படுகிறார் என ராகுல் கூறியுள்ளார்.


New Delhi: 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போதும் தனது முடிவில் தீர்மானமாக இருப்பதாகவும், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடபோவதில்லை என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நான் ஈடுபடபோவதில்லை, அது விஷயங்களை மேலும் சிக்கலாக்கும். அதனால், கட்சியே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்று கூறியுள்ளார்.

ஒரே குடும்பம் கட்சியை வழிநடத்துவது, பொறுப்புடைமை இல்லாமை உள்ளிட்ட காரணங்களே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் 44 தொகுதிகளை கைப்பற்றி தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டவாது முறையாக 52 தொகுதிகளை கைப்பற்றி, இந்தமுறையும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

மேலும், இந்த தோல்வியிலும் முக்கியமாக பேசப்பட்டது, ராகுலின் குடும்ப தொகுதியான அமேதியில், பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி ராணியிடம், ராகுல் காந்தி தோல்வியுற்றதே. எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது.

இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்கவில்லை. எனினும், ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள், தொடர்ந்து ராகுலை நேரில் சந்தித்தும், போன் மூலம் தொடர்பு கொண்டும், ‘முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்தி வருகிறார்கள்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................