This Article is From Aug 12, 2020

மாபெரும் பொருளாதார வீழ்ச்சி; ’மோடி இருந்தால், எல்லாம் சாத்தியமாகும்’: ராகுல் கிண்டல்!!

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இன்னும் பின்னோக்கி செல்லுமோ என்ற அச்சமும் உள்ளது.

மாபெரும் பொருளாதார வீழ்ச்சி; ’மோடி இருந்தால், எல்லாம் சாத்தியமாகும்’: ராகுல் கிண்டல்!!

மாபெரும் பொருளாதார வீழ்ச்சி; ’மோடி இருந்தால், எல்லாம் சாத்தியமாகும்’: ராகுல் கிண்டல்!!

New Delhi:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இதுவரை கண்டிராத அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைய உள்ளது என இன்ஃபோசிஸ் நிறுவனரான என்.ஆர்.நாராயண மூர்த்தி எச்சரிக்கை விடுத்திருந்ததை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 

'மோடி இருந்தால், எல்லாம் சாத்தியமாகும்' என்ற பாஜகவின் 2019 தேர்தல் முழக்கத்தை நினைவுகூர்ந்து, அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் நாராயண மூர்த்தி பேட்டியின் ஸ்கிரின் ஷாட்டுடன், பதிவிட்டுள்ளார். அதில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 1947ல் சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி அடைய உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதாரம் மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் மக்கள் நோய்க்கிருமியுடன் வாழ தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இன்னும் பின்னோக்கி செல்லுமோ என்ற அச்சமும் உள்ளது. உலக ஜிடிபியும் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வர்த்தகமும் சுருங்கியுள்ளது. உலகளவில் பயனங்களே இல்லாமல் போய்விட்டது. உலக ஜிடிபியனாது 5 முதல் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், ராகுல் காந்தி தொடர்ச்சியாக எல்லைக்கோட்டுப் பகுதியில் சீனாவின் ஊடுருவல் குறித்தும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் அரசை தொடர்ச்சியாக சாடி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். 

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் மோடிக்கும் அவரது குழுவுக்கும் இந்திய பொருளாதாரத்தை சரிசெய்யும் "புரிதலோ, அல்லது திறனோ" இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்..

இந்த கொரோனா தொற்று காரணமாக சிறிய நிறுனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.  . 

.