மணமேடையில் ‘பப்ஜி’ விளையாடிய மாப்பிள்ளை! கடுப்பான உறவினர்கள்!! #ViralVideo

PUBG: மணமகள் அருகில் அமர்ந்திருந்தபோதும், மாப்பிள்ளையின் கவனம் முழுவதும் பப்ஜியில்தான் இருந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மணமேடையில் ‘பப்ஜி’ விளையாடிய மாப்பிள்ளை! கடுப்பான உறவினர்கள்!! #ViralVideo

PUBG: மணமகன் பப்ஜி ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மணமேடையில் மணப்பெண் அருகில் இருந்தும் மாப்பிள்ளை ஒருவர் பப்ஜி(PUBG) விளையாடிக் கொண்டிருக்கிறார். கிஃப்ட் ஒன்று அவருக்கு அளிக்கப்படும்போது அதை தட்டி விட்டு அவர் பப்ஜி ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதன் முதலில் இந்த வீடியோ டிக் டாக் ஆப்பில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்து ஒருவர் பின் ஒருவர் ஷேர் செய்ய, ஃபேஸ் புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியே வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோ –

இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த வீடியோவுக்கு பலரும் நகைச்சுவையாக கமென்ட் செய்து வருகின்றனர்.

PlayerUnknown's Battlegrounds எனப்படும் PUBG கேம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. இந்த விளையாட்டு மொழி, மக்களின் நடத்தை உள்ளிட்டவற்றை பாதிப்பதாக கூறி, குஜராத் அரசு இந்த விளையாட்டிற்கு சமீபத்தில் தடை விதித்திருக்கிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................