This Article is From Feb 15, 2019

‘மிகப் பெரிய தவறிழைத்துவிட்டார்கள்!’- தீவிரவாதிகளை எச்சரிக்கும் பிரதமர் மோடி

இந்த காரியத்தில் ஈடுபட்ட மற்றும் அதற்கு துணை போன அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும், ஜெட்லி

அளும் அரசாங்கமோ, எதிர்கட்சியோ இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், பிரதமர் மோடி

ஹைலைட்ஸ்

  • யாராக இருந்தாலும் பதில் சொல்லியே ஆக வேண்டும், பிரதமர் மோடி
  • முன்னதாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மோடி
  • இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது
New Delhi:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இன்று பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்த காரியத்தைச் செய்தவர்கள் மகிப் பெரிய தவறிழைத்துள்ளார்கள்' என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார். 

புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் துணை ராணுவத்தினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன், ரிசர்வ் போலீஸ் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதினார்.

இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 10, 12, 25 என அதிகரித்து தற்போது 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி பேசியுள்ள மோடி, ‘இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் தீவிரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துள்ளார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் நீதிக்கு முன்னர் நிறுத்தப்படுவர்.

இந்தச் சம்பவத்தை கேள்விபட்டதில் இருந்து அனைவரது ரத்தமும் கொதிக்கிறது என்பதை நான் அறிவேன். மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடிய நேரமிது. அளும் அரசாங்கமோ, எதிர்கட்சியோ இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம் நாடு ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால், நமது அண்டை நாடு, நம் தேசத்தை குலைக்கலாமல் என்று நினைத்தால், அது எப்போதும் நிறைவேறாது' என்று கொதிப்புடன் பேசினார். மூத்த மத்திய அமைச்சர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடியதை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் பிரதமர் மோடி.

முன்னதாக அருண் ஜெட்லி பேசுகையில், ‘இந்த சம்பவத்துக்குக் காரணமான பாகிஸ்தான் தனித்துவிடப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த காரியத்தில் ஈடுபட்ட மற்றும் அதற்கு துணை போன அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என்று உஷ்ணமாக கூறினார். 

 

மேலும் படிக்க : "தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்காதீர்கள்" - காஷ்மீர் தக்குதலுக்கு பாகிஸ்தானை எச்சரித்த அமெரிக்கா


 

.