This Article is From Jan 15, 2020

“பதிலடி முதல் வாவ் வரை…”- அரசியல் தலைவர்களின் வித்தியாசமான Pongal வாழ்த்துகளின் தொகுப்பு!!

Pongal Celebration: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வீடியோ மூலம் மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

“பதிலடி முதல் வாவ் வரை…”- அரசியல் தலைவர்களின் வித்தியாசமான Pongal வாழ்த்துகளின் தொகுப்பு!!

Pongal Celebration: பொங்கலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பாணியில் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். 

Pongal Celebration: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கலை, போகிப் பொங்கல், பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடுகின்றனர் தமிழர்கள். ஜல்லிக்கட்டு முதலிய வீர விளையாட்டுகள், அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியடைவது உள்ளிட்டவைகளால் தமிழகமே ‘பொங்கல் களைகட்டியுள்ளது'. பொங்கலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பாணியில் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வீடியோ மூலம் மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின், ரஜினியின் ‘துக்ளக்' பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாஸ், பொங்கலைக் கொண்டாடி வித்தியாசமான முறையில் வீடியோ பகிர்ந்துள்ளார். இப்படி அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகளின் தொகுப்பு இதோ:

.