This Article is From Oct 17, 2018

ஸ்ரீநகரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்தது. இணைய வசதியை துண்டித்தது

ஸ்ரீநகரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியை சுற்றி செல்போன் இணைய வசதி துண்டிக்கப்பட்டது.

New Delhi:

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

ஃபாட்டே கடல் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததும், அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து பாதுகாப்பினையும் பலப்படுத்தினர். தீவிரவாதிகளை கைது செய்யவே போலீசார் முற்பட்டனர் இருப்பினும் தீவிரவாதிகள் தாக்க ஆரம்பித்ததால், என்கவுண்டராக மாறியது.
 

இந்த துப்பாக்கி சூட்டில், இறந்த தீவிரவாதிகள் மெஹர்ஜூதின், பாகத் வாசா மற்றும் ரயீஸ் அடையாளம் காணப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் இறந்த கமல் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஆவார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்தது. இணைய வசதியை துண்டித்தது.
 

.