ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் உட்பட இருவர் மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் மேலும் மூன்று வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் உட்பட இருவர் மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் உட்பட இருவர் மரணம்! (File)

Srinagar/ New Delhi:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் மேலும் மூன்று வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் நகரில் சிஆர்பிஎப் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும், பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 

இந்த தாக்குதலில் நான்கு சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதில், ஒருவர் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலின் போது தனது குழந்தைகளுடன் காரில் வந்த பொதுமக்களில் ஒருவரும் தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

சோபோரின் மாடல் டவுனில் நாகா ரோந்து படையினரை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் இருக்கும் இடம் சுற்றிவைக்கப்பட்டு அவர்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.