This Article is From Jul 15, 2018

போலி பாஸ்போர்ட் மோசடி அம்பலமானது

மோசடியில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 38 வயது பெண் உட்பட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

போலி பாஸ்போர்ட் மோசடி அம்பலமானது
Chennai, Tamil Nadu:

சென்னை, தமிழ்நாடு: இலங்கையர்களை, இந்திய குடிமகன்கள் என இங்கிருந்து வெளிநாட்டிற்கு பயணம் செய்ய உதவிய போலி பாஸ்போர்ட் மோசடியை போலிசார் அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 38 வயது பெண்மனி உட்பட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, குற்றப்பிரிவு போலிசார் இலங்கையர்களிடம் இருந்து ரூ. 10 லட்சம் வரை பெற்று போலி பாஸ்போர்ட் தயாரித்த குற்றத்திற்காக ஒரு பயண ஏஜெண்ட் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் அந்த பெண் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவின் மூலம் இந்தியா வந்துள்ளதாகவும், அந்த விசா காலாவதியாகிய பின்னரும் இங்கேயே தங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண் ஒரு பயண ஏஜெண்டின் உதவியை நாட, அவர் இந்த பெண்மனிக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கியிருக்கிறார்.

இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கும் அவருடைய சக கூட்டாளி ஒருவர், இவருடைய பெயரில் போலி ஆதார் கார்ட் பெற்றிருக்கிறார்.

அந்த பெண்மனி மற்றும் அவருடைய கூட்டாளி, சென்னையில் உள்ள ஒரு இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர், பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த செயல் முறையை விளக்கிய போலிசார், அந்த பயண ஏஜெண்ட் கொழும்புவில் இருக்கிற தன்னுடைய உதவியாளர் தருகின்ற தகவல்களை அடிப்படையாக வைத்து இலங்கையர்களுக்கு போலி இந்தியா பாஸ்போர்ட் தயார் செய்து வந்திருக்கிறார், என்றனர்.

அந்த நபர் அவரது கும்பலின் உதவியுடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களிடம் இருந்து காலாவதியான பாஸ்போர்ட்களை வாங்கி இலங்கையர்களிடம் செல்லத்தக்க இந்திய பாஸ்போர்ட்டாக விற்றிருக்கின்றனர்.

போலிசார் மேலும் 77 இந்திய பாஸ்போர்ட்கள், 12 இலங்கை பாஸ்போர்ட்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள் மற்றும் ரூ. 85,000 ரொக்கத்தையும் பரிமுதல் செய்துள்ளனர்.

.