This Article is From Apr 23, 2019

''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்

ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1-ம்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிடம் இருந்து இந்தியாதான் அதிகளவு பெட்ரோலை வாங்குகிறது.

''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்

மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி வெளியாகின்றன.

New Delhi:

மக்களவை தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரைக்கும் மோடி உயர்த்தி விடுவார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் விலை உயர்வை மோடி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடி தன்னைப் பற்றி ஏன் தற்பெருமை பேசி வருகிறார்? தவறான தகவல்களை அளித்து நாட்டு மக்களை முட்டாள் ஆக்குவதற்கும், வாக்குகளை கவர்வதற்கு முயற்சி செய்கிறார். 

மே 23-ம்தேதி வரைக்கும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களை மோடி அறிவுறுத்தியுள்ளார். மே 23-ம் தேதி மாலையிலேயே பெட்ரோல் - டீசல் விலையை ரூ. 5-10 வரைக்கும் உயர்த்துவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் மக்கள் இந்த முறை ஏமாற மாட்டார்கள். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 69.61-ஆக சரிந்துள்ளது. 

இவ்வாறு ரன்தீப் கூறியுள்ளார். ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டிடம் இருந்து மே 1 முதல் மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு இந்த விவகாரத்தில் அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. 
 

.