This Article is From Mar 27, 2019

‘விண்வெளியில் இந்தியா மகத்தான சாதனை!’- பிரதமர் மோடி தகவல்

இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம்- மோடி

‘விண்வெளியில் இந்தியா மகத்தான சாதனை!’- பிரதமர் மோடி தகவல்

Prime Minister Narendra Modi: கடைசியாக பிரதமர் மோடி, 2016, நவம்பர் 8 ஆம் தேதி, தேச மக்களிடம் உரையாற்றினார்

New Delhi:

இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்த செயற்கைக்கோளை, ஏவுகணை மூலம் துல்லியமாக தாக்கி வெற்றி கண்டுள்ளோம். இதற்கு முன்னர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டும்தான்' என்று பேசினார். ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்ட 3 நிமிடத்தில் சோதனை வெற்றியடைந்தது என பிரதமர் கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘மிஷன் சக்தி திட்டம் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி. நாம் எல்லோரும் இது குறித்து பெருமைப்பட வேண்டும். தரை வழியாக, நீர் வழியாக மற்றும் ஆகாய வழியாக மட்டுமல்ல, இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி. இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. 

இந்த சோதனைக்குப் பிறகும், விண்வெளி மூலம் போர் தொடுக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம். இந்தியா தற்போது முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது' என்றார். 

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்று காலை 11:45 முதல் 12 மணிக்குள் நாட்டு மக்களிடம் ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச உள்ளேன். இந்த உரையாடலை டிவி, ரேடியோ மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பாருங்கள்' என்று முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கடைசியாக பிரதமர் மோடி, 2016, நவம்பர் 8 ஆம் தேதி, தேச மக்களிடம் உரையாற்றினார். அப்போது உயர் ரக ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000-ஐ பணமதிப்பிழப்பு செய்வது குறித்து அறிவித்தார். மீண்டும் அவர் அதே ஆண்டின் டிசம்பர் 31 ஆம் தேதி, நாட்டு மக்களிடம் பேசினார். பணமதிப்பிழப்பு அமல் செய்து 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் பேசினார் மோடி. 

.