This Article is From Jun 01, 2020

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு": பரபர தகவல்!

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டியும் இன்று சந்திக்க உள்ளன. 

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில்

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு 'ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க' முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று முழு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு 'ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க' முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டியும் இன்று சந்திக்க உள்ளன. 

லடாக் பகுதியில் சீனாவுடன் நிலவி வரும் பதற்ற சூழல் குறித்து பாதுகாப்பு கமிட்டி கலந்தாலோசிக்கும் எனத் தெரிகிறது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது குறித்து பொருளாதார கமிட்டி விவாதிக்கும் எனக் கூறப்படுகிறது. 

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு (லாக்டவுன்) போடப்பட்டிருந்த நிலையில் ‘அன்லாக் 1' (Unlock 1) ஆரம்பிக்கிறது. இதன் மூலம் தடை செய்யப்பட்டிருந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சியில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் மூலம், நாட்டில் சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. 

பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலே, ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு தரப்பு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சென்ற மாதம் உள்நாட்டு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டன. 

இப்படி தளர்வுகள் ஒரு பக்கம் அறிவிக்கப்பட்டாலும், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

தற்போதைய நிலவரம் குறித்து, தன் இரண்டாவது ஆட்சியின் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டு நாம் வளர்ச்சிப் பாதையில் சென்றோம். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உலகை ஆச்சரியப்படுத்திய மாதிரியே, பொருளாதார மீட்சியிலும் உலகை இந்தியா ஆச்சரியப்படும்,” எனத் தெரிவித்தார். 

.