This Article is From Mar 03, 2020

'சமூக வலைத்தளங்களிலிருந்து விலக விரும்புகிறேன்' - வைரலாகும் பிரதமர் மோடியின் ட்வீட்..

2014 ம் ஆண்டு அவர் பதவியேற்றதிலிருந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாத பிரதமர், தனது ஆதரவாளர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாகத் தொடர்புகொள்வதில் பெருமிதம் கொண்டார்

'சமூக வலைத்தளங்களிலிருந்து விலக விரும்புகிறேன்' - வைரலாகும் பிரதமர் மோடியின் ட்வீட்..

ஒரு மணி நேரத்திற்குள் 65,000 க்கும் மேற்பட்ட லைக்குகள், 42,000 பதில்கள் மற்றும் 22,000 ரீட்வீட்களைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாத பிரதமர்
  • என்ன காரணம் என்பதை அவர் விவரிக்கவில்லை
  • பிரதமரின் இந்த டீவீட்டுக்கு ராகுல் காந்தி அளித்துள்ள பதில்
New Delhi:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்களன்று சமூக ஊடக பயனாளிகளைத் தனது ட்வீட் மூலம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளை ஒரு வாரத்தில் விட்டுவிடுவது குறித்து யோசிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் அவ்வாறு எல்லா சமூக ஊடக கணக்குகளை விட்டுவிட என்ன காரணம் என்பதை அவர் விவரிக்கவில்லை. ட்விட்டரில் 53.3 மில்லியன், பேஸ்புக்கில் 44 மில்லியன், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியன் மற்றும் யூடியூபில் 4.5 மில்லியன் என்று உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பின்தொடரும் ஒரு நபர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2014 ம் ஆண்டு அவர் பதவியேற்றதிலிருந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாத பிரதமர், தனது ஆதரவாளர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாகத் தொடர்புகொள்வதில் பெருமிதம் கொண்டார்.
இந்நிலையில் திங்களன்று இரவு 9 மணியளவில் ட்விட்டரில் வெளியான அவருடைய இந்த அறிவிப்பு பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் 65,000 க்கும் மேற்பட்ட லைக்குகள், 42,000 பதில்கள் மற்றும் 22,000 ரீட்வீட்களைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்ததிலிருந்து ஆன்லைனில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், பிரதமர் மோடி ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்த சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான 'லைக்குகள்' மற்றும் பதில்களைச் சுலபமாகத் தட்டிச்சென்றுள்ளார். எவ்வாறாயினும், டெல்லியில் அண்மையில் நடந்த வன்முறைக்கு, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் தனது முதல் பதிலைத் தந்ததற்காக மிகவும் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலைத்தளத்தில் பத்திரிகையாளர்களைக் குறித்து முறைகேடாகப் பதிவிடுவோர், 'ஆன்லைன் ட்ரோலிங்' எனப்படும் பிறரை வன்மையாகச் சாடும் பதிவுகளைப் பதிவிடுவோர், ஏன் ஒருவரின் மரணத்தைக் கூட கொண்டாடியவர்களின் கணக்குகளைப் பிரதமர் மோடி பின்பற்றுவதன் மூலமும் பல விமர்சனங்களைப் பெற்றுள்ளார். சமீபத்திய வாரங்களில், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான வன்முறையைத் தூண்டும் வெறுக்கத்தக்கப் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து சமூக ஊடகங்கள் இந்தியாவில் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சமூக ஊடகங்களை விட்டு வெளியேறுவது குறித்து திங்களன்று பிரதமர் போட்ட இந்த பதிவு, அவரது எதிர்ப்பாளர்களிடமிருந்து திகைப்பு மற்றும் கிண்டல் கலந்த பத்திகளை ஈர்த்துள்ளது. 

பிரதமரின் இந்த ட்விட்டுக்கு ராகுல் காந்தி அளித்துள்ள பதில்...

இந்தியாவில் சென்சார் எனப்படும் 'தணிக்கை' என்ற ஒரு பெரிய முயற்சியை நோக்கிய முதல் படியாக இது இருக்கக்கூடும் என்று அவரது கட்சி சகா சஷி தரூர் கூறியுள்ளார்.

இதுஒருபுரம் இருக்க அவரது ஆதரவாளர்கள் தற்போது #NOSIR என்ற ஹாஷ் டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர், நோ சார் என்ற பெயரில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் தனது இந்த முடிவை பற்றி பிரதமர் மறுபரிசீலனை செய்யும்படி அவரை வலியுறுத்தியுள்ளனர். 

அவரது ஆதரவாளர் ஒருவர் எழுதியுள்ள பதிவில் "ஏன் ஐயா? இதுதான் நாங்கள் உங்களுடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரே வழி. சமீபத்திய சூழ்நிலையால் நீங்கள் வேதனைப்படுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம். நீங்கள் எங்கள் ஆதரவாளர், நீங்கள் தான் எங்களின் பலம். நீங்களே எங்களுக்கு மிகப்பெரிய முன்மாதிரி என்று கூறியுள்ளார். 
 

.