This Article is From Mar 23, 2020

“ஊரடங்கு உத்தரவை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..!”- வருத்தப்படும் பிரதமர் மோடி

Coronavirus Lockdown: இந்தியாவில் உள்ள 80 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு.

“ஊரடங்கு உத்தரவை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..!”- வருத்தப்படும் பிரதமர் மோடி

Coronavirus lockdown: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஹைலைட்ஸ்

  • இந்திய அளவில் 390-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • இதுவரை 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
New Delhi:

மத்திய அரசால் அமல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பலரும் முக்கியமானதாகக் கருதவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை, இந்திய அளவில் 390-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இப்படியொரு கருத்தைத் தெரிவித்துள்ளார். 

“பலரும் ஊரடங்கு உத்தரவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள். அரசின் உத்தரவுகளை முறைப்படி பின்பற்றுங்கள். மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்தியாவில் உள்ள 80 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த இடங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ரயில் சேவை, உள் மாவட்ட பேருந்து சேவைகள், பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

இதுவரை அரசு மட்டுமே கொரோனா குறித்த பரிசோதனை செய்து வந்தது. தற்போது பரிசோதனையை அதிகரிக்கும் நோக்கில் தனியார் சோதனை மையங்களுக்கும், கொரோனா பரிசோதனை செய்ய அரசு அனுமதித்துள்ளது. இதன் மூலம் அதிக நபர்களுக்குப் பரிசோதனை செய்ய முடியும். 

.