This Article is From Feb 19, 2019

விஜயகாந்தை சந்தித்தது ஏன்? விளக்கும் பியூஸ் கோயல்

விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தேன் என பாஜக-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தை சந்தித்தது ஏன்? விளக்கும் பியூஸ் கோயல்

முன்னதாக இன்று காலையில் சென்னை கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில் அதிமுக - பாமக கூட்டணி இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகை தந்ததார். மதியம் வரை நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக பாமக இடையே கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிமுக பாஜவுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாகயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றிருந்தார். அவர் இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். அவரை பாஜக-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பிற்கு பின்னர் தேமுதிக, அதிமுக அணியில் இணைவது குறித்தும் இன்று அதிகாரபூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், சந்திப்பு முடிந்த பின்னரும் அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி என எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம். சந்திப்புகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்திந்தேன்.

விஜயகாந்த் உடல் நலன் தேறி வருகிறார். அவர் நீண்ட உடல் நலத்துடன் இருக்க பிரார்த்திக்கின்றோம். அவர் மோடியின் நடவடிக்கைகளே பாராட்டினார் என்று அவர் கூறினார்.

.