பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத்.
Islamabad: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிக்கொண்டிருந்தபோது அந்நாட்டு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுக்கு மின்சார ஷாக் அடித்தது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ள நிலையில், அந்த மாநில மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நேற்று காஷ்மீர் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கான் கலந்துகொண்டு பேசினார்.
காஷ்மீர் விவகாரத்தில் உங்களின் நோக்கம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும் நரேந்திர மோடி என்று அவர் ஆவேசமாகப் பேசியபோது, கையில் பிடித்திருந்த மைக்கின் மூலம் அவருக்கு எலட்ரிக் ஷாக் அடித்தது. இதையடுத்து அவர் தனது பேச்சை உடனடியாக நிறுத்தினார்.
பிறகு சுதாரித்துக் கொண்டு பேச்சைத் தொடங்கிய அவர், மைக்கிலிருந்து மின்சார அதிர்வு ஏற்பட்டது. மக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடியால் இந்தப் பேரணிக்கு இடையூறு ஏற்படுத்த இயலாது என்று கூறினார்.
ஷேக் ரஷீத் கடந்த 2 நாட்களுக்கு முன் பேசும் போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் "அக்டோபர் அல்லது அடுத்த மாதத்தில்" ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், பாகிஸ்தான் வர்த்தக உறவுகளை குறைத்து இந்திய தூதரை வெளியேற்றியது. காஷ்மீரில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாட்டின் உள்விவகாரம் என்று கூறிவரும் இந்தியா, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது.