‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்!!

ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் போட்டியாளர்களாக கருதப்படும் கமலா ஹாரிஸ், பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோர் ஊழியர் போராட்டம் தொடர்பாக கருத்து கூறியுள்ளனர்.

‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்!!

ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

San Francisco:

அமேசான் ஆன்லையின் ப்ரைம் டே விற்பனையையொட்டி சலுகைகள் பல வழங்கப்பட்டு விற்பனை தீவிரம் அடைந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர்.

மின்னசோட்டாவில் உள்ள நிறுவனத்தின் முக்கிய தொழிற்சாலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்ப்பதை தாமதப்படுத்திய ஊழியர்கள் பணியிடங்ளில் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை' என்று பொருள்படும் பதாகைகளை வைத்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒருவரான சபியோ முகமது என்பவர் கூறுகையில், ‘ப்ரைம் டே என்பது அமேசான் நிறுவனத்திற்கு மிக முக்கியமான நாள் என்று எங்களுக்கு தெரியும் இந்த ஸ்ட்ரைக் எங்களது உயர் அதிகாரிகளுக்கு எங்களது பிரச்னை குறித்துஅறியச் செய்யும்.

நாங்கள் அமேசான் நிறுவனத்திற்கு ஏராளமான லாபத்தை பெற்றுத் தந்துள்ளோம். ஆனால் அவர்கள் எங்களை மரியாதையுடன் நடத்தவில்லை' என்றார். சில மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

பணி பாதுகாப்பு, சம வாய்ப்பு, பணியிடங்களில் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களாக கருதப்படும் கமலா ஹாரிஸ், பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோர்ஆதரவுதெரிவித்துள்ளனர். பெர்னி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அமேசான் ஊழியர்கள் பணி செய்யும் இடத்தின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்தான் அமேசான் நிறுவனத்தை வைத்துள்ளார். அவர் தனது ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவைப் போன்று ஜெர்மனியின் 7 இடங்களில் போராட்டம்நடத்தப்பட்டது.

அமேசான் ப்ரைம் டே விற்பனை கடந்த ஆண்டு 320 கோடி அமெரிக்க டாலராக இருந்த நிலையில் தற்போது 500 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News