நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கு தடையா? என்ன சொல்கிறது நீதிமன்றம்

ஆன்லைனில் கிடைக்கும் ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் பொழுதுபோக்கு தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் அல்லது வழிகாட்டுதல்களை இயக்க வேண்டும் -

 Share
EMAIL
PRINT
COMMENTS
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கு தடையா? என்ன சொல்கிறது நீதிமன்றம்

நெட்பிளிக்ஸை தடைச்செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவிதுள்ளது.


New Delhi: 

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஆன்லைன் தளங்கள் தங்கள் தொடர்களை ஒளிபரப்ப உரிமம் பெற தேவையில்லை என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தன்னார்வுத் தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஆன்லைன் தளங்கள் எந்தவிதமான நெறிமுறைகளும் இன்றி செயல்படுவதாகவும், இதனால், இது போன்ற தளங்களில் ஆபாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், இதுபோன்று ஆன்லைனில் கிடைக்கும் ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் பொழுதுபோக்கு தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் அல்லது வழிகாட்டுதல்களை இயக்க வேண்டும் என அந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. 

இது தொடர்பான வழக்க இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.காமேஸ்வர ராவ் கொண்ட அமர்வு விசாரணையில், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஆன்லைன் தளங்கள் தங்கள் தொடர்களை ஒளிபரப்ப உரிமம் பெற தேவையில்லை என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இந்த மனுவில் எந்தவித பொதுநலனும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................