This Article is From Jul 11, 2019

காதல் திருமணம் செய்து கொண்டேன் அப்பாவினால் என் உயிருக்கு ஆபத்து - பாஜக எம்.எல்.ஏ மகளின் வைரல் வீடியோ

நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திராமாவும் இருக்க விரும்புகிறேன் - வீடியோவில் கூறுகிறார் சாஷி

மற்றொரு வீடியோவில் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என்று காவல்துறையினரிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • Sakshi Misra, 23, claims her life is in danger
  • She requests police to "give us security and protect us"
  • Sakshi Misra is daughter of Rajesh Misra, BJP legislator from Bareilly
New Delhi:

உத்திர பிரதேசத்தில் ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினரின்  மகள் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன் தந்தைக்கு விருப்பம் இல்லாத மற்றொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் தன் தந்தையினால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று  கூறியுள்ளார். தனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என்றும் கூறியுள்ளார். 

 23 வயதான சாஷி மிஸ்ரா, பரேலியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ் மிஸ்ராவின் மகள் ஆவார். வீடியோவில் தனது தந்தை மற்றும் சகோதரர்களான ‘பப்பு பர்தால்' மற்றும் ‘விக்கி பர்தால்' ஆகியோரால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

 “மரியாதைக்குரிய எம்.எல்.ஏஜி, பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி தயவு செய்து என்னை அமைதியாக வாழ விடுங்கள். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஃபேஷனுக்கான குங்குமம் வைக்கவில்லை” என்று அந்த பெண் வீடியோவில் கூறுகிறார். அந்தப் பெண் கணவர் என்று சொல்லும் நபர் மொபைல் போனில் வீடியோ எடுக்கிறார்.  கடந்த வியாழக்கிழமை சாக்‌ஷி மித்ரா  அஜிதேஷ் குமாரை மணந்தார் என்று பிடிஐ செய்தி நிறுவனம்  தெரிவிக்கிறது. 

“அப்பா, ராஜூவ், ராணவைப் போல குண்டர்களை எங்களுக்கு பின்னால் அனுப்பியிருக்கிறீர்கள்…. நான் சோர்வாக இருக்கிறேன்.  ஒளிந்து கொள்ள முடியவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து. அபியையும் அவரது உறவினர்களையும் தொல்லை செய்வதை நிறுத்தி விடுங்கள். நான் மகிழ்ச்சியாகவும்  சுதந்திராமாவும் இருக்க விரும்புகிறேன்” என்று அவர் வீடியோவில் கூறுகிறார். 

இந்த வீடியோ மூலம் எதிர்காலத்தில் எனக்கோ அல்லது அபி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதேனும் நேர்ந்தால் எனது தந்தை மற்றும் சகோதரர்களே காரணம். எங்களின் தந்தைக்கு உதவி செய்பவர்கள் உதவியை நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் உயிர் ஆபத்தில் உள்ளது என்று கூறியுள்ளார். 

மற்றொரு வீடியோவில் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என்று காவல்துறையினரிடம்  கோரிக்கையும் வைத்துள்ளார். 

இந்த வீடியோக்கள் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

காவல்துறை துணை ஆணையர் ஆர்.கே.பாண்டே வீடியோக்களை பார்த்ததாகவும் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் கூறினார். ஆனால் தம்பதியினர் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது காவல்துறைக்கு தெரியவில்லை என்றார். 

.