This Article is From Dec 31, 2019

Video: உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் மீது மை ஊற்றிய பெண் தொண்டர்

ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒரு நபர் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது மையை ஊற்றுகிறார்.

Video: உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் மீது மை ஊற்றிய பெண் தொண்டர்

ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒரு நபர் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது மையை ஊற்றுகிறார்.

Mumbai/ New Delhi:

சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த நபர் மீது சிவசேனா கட்சியின் பெண் தொண்டர் மை ஊற்றினார். கடந்த வாரம் மும்பை நபர் ஒருவர் எழுதிய பதிவிற்காக இச்செயலை செய்துள்ளனர்.

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயினால் வெளியிடப்பட்ட 17 விநாடிகள் கொண்ட காணொளியில் ஒருபெண் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒரு நபர் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது மையை ஊற்றுகிறார். அந்நபர் விலகிச் செல்லவும் இல்லை. பெண்ணைத் தடுக்கவும் இல்லை. தொடர்ந்து தொலைபேசியில் பேசுகிறார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்தது. 

கடந்த வாரம் வடலாவில் வசிக்கும் ஹிராமாய் திவாரி டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த குடியுரிமை எதிர்ப்பு சட்ட போராட்டத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு முதலமைச்சர் குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து அவர் மீது மை ஊற்றப்பட்டுள்ளது. 

டிசம்பர் 19 அன்று ஜாமியா மில்லியா சம்பவத்தை ஜாலியன் வாலாபாக் உடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஒப்பிடுவது தவறானது என்று நான் பதிவிட்டேன். அதன் பிறகு 25-30 பேர் என்னை தாக்கி தலையை மொட்டையடித்தனர் என்று திவாரி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் தெரிவித்தார். 

நான் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தேன். காவல்துறை அதிகாரிகளோ புதியதாக சமரசக் கடிதத்தை தட்டச்சு செய்து அதில் என்னை கையெழுத்திடச் சொன்னார்கள். வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு முதலமைச்சரின் மகன் ஆதித்யா தாக்கரே சமூக ஊடகங்களில் பதிலளித்தார். “அற்பமான ட்ரோல்க்கு மிகவும் கோபமான எதிர்வினை குறித்து நான் அறிந்தேன். மத நல்லிணக்கத்தை பேணுவதற்கும் முதலமைச்சர் முயன்று வருகிறார். நாம் நமது முதல்வரைப் பின்பற்றுவோம் அமைதியாக கொடுத வாக்குறுதிகளை வழங்குவதில் மக்களுக்கு சேவை செய்வதின் மூலம் மக்களை வெல்வோம்.” என்று தெரிவித்துள்ளார்

.