This Article is From Apr 16, 2019

பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து!

Notre Dame Cathedral Fire Paris: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், 'மிக மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்று கூறியுள்ளார்.

பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து!

Notre Dame Cathedral Fire: பிரான்ஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் திங்களன்று மாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஹைலைட்ஸ்

  • மாபெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கதீட்ரல் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்
  • தேவாலயத்தை மீண்டும் புதுப்பிப்போம் என பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார்.
  • நோட்ரே டேம் தேவாலயம் எங்களின் வரலாறு என்று மாக்ரோன் கூறியுள்ளார்
Paris, France:

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், 'மிக மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தேவாலயம் முழுவதும் பரவிய தீ பெரும்பகுதியை சேதப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டின் ஆன்மா என்று கூறப்படும் ஒரு கட்டிடம் சேதமடைந்தது, அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்வதேச அளவில் நிதி திரட்டும் திட்டத்தை தொடங்க முயற்சி செய்ய உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 850 வருட பழமையானதாகும். பாரம்பரியாகச் சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தின் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன.

4seep6f

qs107t6o

400க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வீரர்ள், தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடியுள்ளனர். சுமார் 9 மணி போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்துள்ளது.

90rdpmgo

இதுகுறித்து பாரிஸ் தீயணைப்பு படைத் தலைவர் கேலட் கூறும்போது, " நோட்ரே டேம் தேவாலயத்தின் பிரதான கட்டமைப்பை காப்பாற்றியுள்ளோம், என்றும், இரண்டு கோபுரங்கள் சேதமில்லாமல் இருப்பதாக நாம் கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய கட்டிட கலைக்கு சிறந்த எடுக்காட்டாக விளங்கும் இத்தேவாலயத்தை வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். இந்த தேவாலயம் 69 மீட்டர் உயரமுள்ள இரண்டு கோபுரங்களை கொண்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில், புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், 'மிக மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தேவாலயம் முழுவதும் பரவிய தீ பெரும்பகுதியை சேதப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டின் ஆன்மா என்று கூறப்படும் ஒரு கட்டிடம் சேதமடைந்தது, அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

.