This Article is From Dec 14, 2018

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தூக்கிய நோட்டா வாக்குகள்

மத்திய பிரதேசத்தில் 22 தொகுதிகளில் நோட்டா வாக்குகள் முடிவை மாற்றியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தூக்கிய நோட்டா வாக்குகள்

மொத்தம் 5,42,295 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருக்கின்றன.

Bhopal:

நடந்து முடிந்த மத்திய பிரதேச தேர்தலில் நோட்டாவில் பதிவான வாக்குகள் 22 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கின்றன. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு நோட்டா வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114, பாஜக 109, பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதர கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன.

இந்த தேர்தலில், தொகுதி வேட்பாளர்கள் அனைவரையும் புறக்கணிப்பதாக பொருள்படும் நோட்டாவில், மொத்தம் 5,42,295 வாக்குகள் பதிவாகி உள்ளன. 22 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும் போது, அவை நோட்டாவை விட குறைவு.

அதே நேரத்தில் மாநில அளவில் பாஜக மற்றும் காங்கிரசின் வெற்றி வித்தியாசம் சுமார் 12 தொகுதிகள் மட்டுமே ஆகும். இதன்படி, 22 தொகுதிகளின் முடிவை நோட்டா வாக்குகள் மாற்றிப் போட்டுள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.4 சதவீதம் ஆகும்.

நோட்டா வாக்குகள் மெஜாரிட்டியாக கிடைத்த 4 இடங்களில் பாஜக அமைச்சர்களே தோல்வியை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.