நாட்டில் அதிக 2 சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப், கடந்த மாதம் மட்டும் 20 சதவிகித விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
New Delhi: தற்கால இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதம் வாகனத் துறை மந்தநிலைக்குக் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் கருத்து கூறியிருந்தார். அவரின் இந்த ‘சர்ச்சை' கருத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், ட்விட்டரிலும் கேலிக்குரிய வகையில் ட்ரெண்டாகி உள்ளார் சீதாராமன். #BoycottMillennials, #SayItLikeNirmalaTai ஆகிய ஹாஷ்டேக்குள் மூலம் நெட்டிசன்கள் மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் கனரக வாகன விற்பனையிலும் 70 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள்' என்று தெரிவித்தார்.
நெட்டிசன்கள் பதிவிட்ட ட்வீட்கள் மற்றும் மீம்ஸ்கள் இதோ:
.
சுமார் 3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறை, வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில் அதிக 2 சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப், கடந்த மாதம் மட்டும் 20 சதவிகித விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் மாருதி சுசூகியின் விற்பனை 34 சதவிகிதம் குறைந்துள்ளது.
தற்போது வாகனத் துறைக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை 18 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து சீதாராமன், “ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து நான் தனி நபராக முடிவெடுக்க முடியாது” என்று மட்டும் கூறியுள்ளார்.