This Article is From Jan 24, 2019

சிறையில் இருக்கும் நவாஸ் ஷெரிஃபுக்கு தீவிர சிகிச்சை தேவை - டாக்டர்கள் அறிக்கை

7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று லாகூர் ஜெயிலில் இருக்கும் நவாஸ் ஷெரீஃப் இதயக் கோளாறு இருக்கிறது என்று கூறியதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சிறையில் இருக்கும் நவாஸ் ஷெரிஃபுக்கு தீவிர சிகிச்சை தேவை - டாக்டர்கள் அறிக்கை

69 வயதான நவாஸ் ஷெரிஃப், கோட் லாக்பத் சிறையிலிருந்து பஞ்சாப் இதய மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்.

Lahore:

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று லாகூர் ஜெயிலில் இருக்கும் நவாஸ் ஷெரீஃப் இதயக் கோளாறு இருக்கிறது என்று கூறியதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

69 வயதான நவாஸ் ஷெரிஃப், கோட் லாக்பத் சிறையிலிருந்து பஞ்சாப் இதய மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார். சிகிச்சைக்கு பின் சிறைக்கு திரும்பினார். இருப்பினும் அவருக்கு சிகிச்சை தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஷெரிஃப்பின் மருத்துவ அறிக்கைகள் படி அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயத்தின் முக்கிய வால்வுகளில் பாதிப்பு ஏற்படுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறபட்டுள்ளது.

"எனது தந்தையின் உடல்நிலையை நான் மீடியாக்களை பார்த்துதான் தெரிந்துகொள்கிறேன்" என்று ஷெரிஃபின் மகள் மரியம் கூறியுள்ளார்.

ஷெரிஃபின் சகோதரர் மூன்று முறை பிரதமராக இருந்தவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கேள்வியெழுப்பியுள்ளர்.

ஏற்கெனவே ஷரிஃபுக்கு உதவ ஆட்கள் கோரப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டது.

.