This Article is From Nov 18, 2019

முஸ்லீம் சட்ட வாரியத்தால் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடியாது : ஹிந்து மகாசபா வழக்கறிஞர்

அயோத்தி நில தகராறு வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வு தாக்கல் செய்தவர்களில் பட்டியலில் ஒருவராக இல்லை. அதனால் முஸ்லீம் சட்ட வாரியத்தால் அயோத்தி தீர்ப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை

முஸ்லீம் சட்ட வாரியத்தால் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடியாது : ஹிந்து மகாசபா வழக்கறிஞர்

Ayodhya: அரசியலமைப்பில் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

New Delhi:

அயோத்தி நில தகராறு வழக்கில்  அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வு தாக்கல் செய்தவர்களில் பட்டியலில் ஒருவராக இல்லை.  அதனால் முஸ்லீம் சட்ட வாரியத்தால் அயோத்தி தீர்ப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று வழக்கறிஞர் வருண் சின்ஹா தெரிவித்துள்ளார். 

அகில இந்தியா முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்  மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய முடியாது. சன்னி வக்ஃப் வாரியம் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று சின்ஹா தெரிவித்தார். 

“உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்துள்ளது. முஸ்லீம் அமைப்பினால் சர்ச்சைக்குரிய தளம் மற்றும் கட்டமைப்பினை தங்களின் பிரத்யேக உடைமையை நிறுவ முடியவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது” என்று சின்ஹா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதில் முஸ்லீம் சட்ட வாரியம் எப்படி அதில் உள்ள பிழையினை கண்டறியப் போகிறது  என்பது புரியவில்லை என்று சின்ஹா தெரிவித்தார். அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய விரும்புவதாக முஸ்லீம் சட்ட வாரியம் தெரிவித்தது. அதே நேரத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்க மறுத்துவிட்டது. 

அயோதித்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அந்த இடத்தை ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

.