This Article is From Feb 24, 2019

ஒன்றை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் :முஷரப்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.

ஒன்றை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் :முஷரப்

ராணுவ கலகத்தின் மூலம் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தவர் பர்வேஸ் முஷரப்

Abu Dhabi:

ஒரு அணுகுண்டை வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியதாவது-

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டது. வருங்காலத்தில் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது. அப்படி ஒருவேளை நாம் (பாகிஸ்தான்) இந்தியாவை ஒரு அணுகுண்டு வீசி தாக்கினால் அவர்கள் நம்மை 20 அணுகுண்டுகள் வீசி அழித்து விடுவார்கள்.

இந்தியாவை தாக்க ஒரேயொரு வழிதான் உள்ளது. நாம் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை அந்நாடு மீது வீச வேண்டும். அப்போதுதான் அவர்களால் நம்மை 20 அணு ஆயுதங்கள் மூலம் தாக்க முடியாது. அப்படி பாகிஸ்தான் அரசால் ஒரே நேரத்தில் 50 அணு ஆயுதங்களை இந்தியாவை நோக்கி செலுத்த முடியுமா?

இவ்வாறு முஷரப் பேசினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கினார்.

உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக அவர் தற்போது அபுதாபியில் வசித்து வருகிறார். தற்போது நாடு திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

ராணுவ கலகத்தின் மூலம் கடந்த 1999-ல் ஆட்சியை பிடித்தார் முஷரப். அதன்பின்னர் 9 ஆண்டுகள் பாகிஸ்தானின் அதிபராகவும் முஷரப் பொறுப்பு வகித்தார்.

.