This Article is From Sep 17, 2019

தாய்க்கு கடன் தர மறுத்ததால் ஆத்திரம்! டியூஷன் டீச்சரை குத்திக் கொன்ற 12 வயது சிறுவன்!!

சிறுவனின் தாயாருக்கும், டீச்சருக்கும் இடையே கடன் தொடர்பாக நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது.

தாய்க்கு கடன் தர மறுத்ததால் ஆத்திரம்! டியூஷன் டீச்சரை குத்திக் கொன்ற 12 வயது சிறுவன்!!

கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Mumbai:

தாய்க்கு கடன் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 12 வயது சிறுவன் ஒருவர் தனது டியூஷன் டீச்சரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கோவந்தியில் உள்ள சிவாஜிநகர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு 30 வயதான ஆயிஷா அஸ்லம் என்பவர் டியூஷன் நடத்தி வருகிறார். 

அவரிடம் டியூஷன் படிக்கும் சிறுவனின் தாயார் கடன் கேட்டுள்ளார். இதற்கு டீச்சர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இரு பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

டீச்சர் வீட்டில் இந்த சம்பவம் நேர்ந்தபோது, அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்த சிறுவன், டீச்சரை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது. கொலையைச் செய்த 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

.