மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் களப்பணியில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜினாமா

கட்சியை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழுவை மிலிந்த் தியோரை கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார்


Mumbai: 

ஹைலைட்ஸ்

  1. மிலிந்த் தியோரா, ராகுல் காந்தியை சந்தித்தபின்னர் முடிவை எடுத்துள்ளார்.
  2. களப்பணி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
  3. மகாராஷ்டிரா தேர்தலுக்காக களப்பணி செய்யவுள்ளார்.


மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு வலுப்படுத்தும் பொருட்டு, தேசிய அளவில் தீவிர களப்பணியில் இறங்கபோவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சியை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழுவை மிலிந்த் தியோரை கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா, சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்திடம் தோல்வி அடைந்தார். அதன்பின் கட்சிப்பணியில் ஈடுபட்டுவந்த மில்த்த் தியோரா கடந்த மாதம் 28-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். 

அப்போதுதான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் களப்பணியில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இதை கருத்தை களப்பணியில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் கருத்தை காங்கிரஸ் பொது செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோரிடமும் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................