This Article is From Jun 22, 2018

சர்ச்சையை கிளப்பிய மெலனியா டிரம்பின் ஆடையில் இருந்த வாசகம்

“மெலனியாவின் ஜாக்கெட்டில் இருந்த வாசகம், போலி செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அணிந்திருந்தார்” என்று டிரம்ப் விளக்கம் அளித்தார்

சர்ச்சையை கிளப்பிய மெலனியா டிரம்பின் ஆடையில் இருந்த வாசகம்

ஹைலைட்ஸ்

  • அகதிகளின் குழந்தைகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
  • அவர்களின் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
  • சமீபத்தி அந்த நடைமுறை மாற்றப்படும் என டிரம்ப் அறிவித்தார்
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி, மெலனியா டிரம்ப் அகதிகள் முகாமில் தஙக் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை சந்திக்கச் சென்றார். எல்லையில் அகதிகளாக கைது செய்பவர்கள் சிறையில் அடைக்கப்பட, அவர்களது குழந்தைகள், முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மெலனியா, வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.

தனி விமான மூலம் மேரிலாண்டில் இருந்து, டெக்சாஸுக்கு சென்றார். அங்கிருந்த முகாமுக்குச் சென்ற மெலனியாவின் மீது திடீர் சர்ச்சை உருவாகியது. மெலனியா அணிந்திருந்த ஜாக்கெட்டில், “ I dont Care? Do you? என்று எழுதப்பட்டிருந்ததே இதற்கு காரணம்.

பெற்றோரை பிரிந்து வாடும், அகதிகளின் குழந்தைகளை காணச் செல்லும் போத, அவரது ஆடையில் இருந்த இந்த வார்த்தைகள் சர்ச்சைய கிளப்பியது. சிறிதி நேரத்தில் அவரது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பதியப்பட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

“இது அந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் ஏளனப்படுத்தும் விதமாக இருக்கிறது” என்று முகாமை நடத்தும் அறக்கட்டளையின் தலைவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் டிரம்ப் கூறியதாவது “மெலனியாவின் ஜாக்கெட்டில் இருந்த வாசகம், போலி செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அணிந்திருந்தார்” என்று வேறொரு விளக்கம் அளித்தார்.

டெக்சாஸில் இருந்து மீண்டும் மேரிலாண்டுக்கு விமானம் மூலம் சென்று சேர்ந்தார். ஆனால் அப்போது அவர் அந்த ஜாக்கெட்டை அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.