This Article is From Jun 04, 2020

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெசிகா லால் கொலை வழக்கு! குற்றவாளி மனுசர்மா விடுதலை

முன்னதாக டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தலைமையில் சிறைத்துறை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் மனுசர்மாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை  அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு, துணை நிலை கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெசிகா லால் கொலை வழக்கு! குற்றவாளி மனுசர்மா விடுதலை

சிறையில் கைதிகளின் மறுவாழ்வுக்காக செயல்படும் என்.ஜி.ஓ. அமைப்பில் மனுசர்மா பணியாற்றினார்.

New Delhi:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மனு சர்மா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  நாட்டில் அதிகம் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்றான இந்த கொலை வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

1999 ஏப்ரல் 30-ம்தேதி டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அன்றைய தினம் முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா உணவகத்தில் வைத்து ஜெசிகா லால் என்ற மாடல் அழகியை சுட்டுக்கொன்றார். 

மதுபானம் ஊற்றித் தருமாறு மனுசர்மா ஜெசிகாவிடம் கூறியுள்ளார்.  இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால்,  அவரை சுட்டுக் கொன்றார்.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் மனு சர்மாவை விடுதலை செய்தது.  ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, மனு சர்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டபோதிலும், 2010-ல் மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து அவர் திகார் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார்.

சிறையில் அவர் 17 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தண்டனையை அனுபவித்த நிலையில், நன்னடத்தை கருதி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பிறப்பித்திருக்கிறார். 

முன்னதாக டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தலைமையில் சிறைத்துறை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் மனுசர்மாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை  அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு, துணை நிலை கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. 

ஏற்கனவே நன்னடத்தை காரணமாக மனு சர்மா திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தவாறே அவர், கைதிகளின் மறுவாழ்வுக்கு பணியாற்றும் என்.ஜி.ஓ. நிறுவனத்தில் பணியாற்றினார்.

2018-ல் என்.டி.டி.வி.க்கு பேட்டி அளித்த ஜெசிகா லாலின் தங்கை சப்ரினா லால்,  மனு சர்மாவை தாங்கள் மன்னித்து விட்டதாகவும், அவரை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.  சிறையில் அவர் சிறப்பான பணியை மேற்கொள்கிறார் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.  

.