This Article is From Mar 17, 2020

“ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!”- கொரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்ள இப்படி ஒரு ஐடியாவா..?

“எப்படி அவர் கதவு வழியாகச் செல்வார்?” என ஒருவர் கேள்வியெழுப்ப

“ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!”- கொரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்ள இப்படி ஒரு ஐடியாவா..?

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, இத்தாலிதான் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பு, உலக சுகாதார அமைப்பு உட்படப் பலர் வலியுறுத்தி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று, மற்றவர்களிடமிருந்து தள்ளியிருப்பது. இப்படி இருப்பதன் மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அது இன்னொருவருக்கு எளிதாகப் பரவாது எனப்படுகிறது. 

இந்நிலையில் இத்தாலியில் பொது இடத்தில் ஒருவர் மிகப் பெரிய டிஸ்க் போன்ற காட்போர்டை கட்டிக் கொண்டு வளம் வந்துள்ளார். தி இண்டிபென்டென்ட் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, இந்த வீடியோ ரோம் நகரத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வீடியோவை பதிவு செய்த நபர், டிஸ்க் கட்டியுள்ள நபரைப் பார்த்து, ‘ஏன் இப்படிக் கட்டியுள்ளீர்கள்?' எனக் கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘கொரோனா வைரஸ் காரணமாக…' என்று பதில் சொல்கிறார். 

அந்த வீடியோவை நீங்களே பாருங்க:

ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 21,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. பலரும் வேடிக்கையாக வீடியோவுக்குக் கீழ் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகிறார்கள். 

“எப்படி அவர் கதவு வழியாகச் செல்வார்?” என ஒருவர் கேள்வியெழுப்ப, இன்னொருவர், “மிக அருமை,” எனப் பாராட்டுகிறார்

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, இத்தாலிதான் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 17,000 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,809 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக, மொத்த நாட்டிலும் மக்கள் சகஜமாக நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை, மற்றவர்களிடத்திலிருந்து தள்ளியிருப்பது என்பது, யாராவது தும்மினாலோ இருமினாலோ 3 அடி தள்ளியிருப்பதாகும். 

Click for more trending news


.